மாவட்ட செய்திகள்

கடலில் இறங்கி தொழிலாளர்கள் போராட்டம் + "||" + porattam

கடலில் இறங்கி தொழிலாளர்கள் போராட்டம்

கடலில் இறங்கி தொழிலாளர்கள் போராட்டம்
கடலில் இறங்கி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் நேற்று சி.ஐ.டி.யூ.கடல்சார் தொழிலாளர்சங்கத்தின் சார்பில் மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவர உள்ள இந்திய கடல்வள மசோதாவை பாராளுமன்றத்தில் இயற்றக்கூடாது எனவும் அதனை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தியும் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடல் சார் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுடலைக்காசி மற்றும் நிர்வாகிகள் காட்டுமாரி, தர்மராஜ், பஞ்சா, ஓலைக்குடா கிராம நிர்வாகிகள் சகாயராஜ், அருளானந்தம், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.