போலீஸ் பணி உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர், ைமதானத்தில் மயங்கி விழுந்து சாவு


போலீஸ் பணி உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர், ைமதானத்தில் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 26 July 2021 7:00 PM GMT (Updated: 26 July 2021 7:00 PM GMT)

விருதுநகரில் 2-ம் நிலை ேபாலீஸ் பணியிடத்திற்கான உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர், 
விருதுநகரில் 2-ம் நிலை ேபாலீஸ் பணியிடத்திற்கான உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
உடற்தகுதி தேர்வு 
விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி திடலில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 2-ம் நிலை போலீஸ் பணியிடத்திற்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வில் விருதுநகர் அருகே உள்ள எம்.அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து (வயது 21) என்பவர் கலந்து கொண்டார். இவர் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்.
இவருக்கான உயரம் மற்றும் மார்பளவு ஆகிய சோதனைகள் முடிந்த பின்பு, 1,500 மீட்டர் ஓடும் திறனை கண்டறிவதற்கான தேர்வில் கலந்து கொண்டார்.
விதிமுறைப்படி 1,500 மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் கடக்க வேண்டும். தேர்வில் கலந்து கொண்ட மாரிமுத்து, தொடக்கத்திலிருந்தே வேகமாக ஓடியுள்ளார்.
வாலிபர் சாவு 
500 மீட்டர் தூரத்தை கடந்த உடனேயே திடீரென அவர் ஓடுகளத்திலேயே தடுமாறி மயங்கி விழுந்தார்.
 உடனடியாக அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை திடலுக்கு அருகில் அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி உடனடியாக மாரிமுத்துவை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் வசதியுடனான ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  மாரிமுத்து உயிரிழந்த தகவல் தேர்வு நடைபெறும் இடத்தில் தெரியத்தொடங்கியதும் அங்கு அதிர்ச்சியும், சோகமும் நிலவியது.
கட்டிட தொழிலாளி 
போலீஸ் உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு உயிரிழந்த மாரிமுத்து டிப்ளமோ முடித்து இருந்தாலும் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சகோதரர் சிவக்குமாரும், தந்தை சங்கர் ராஜாவும் கட்டிட தொழிலாளர்களாக உள்ளனர்.  மாரிமுத்து ஏற்கனவே 2 முறை போலீஸ் தேர்வுக்கு சென்று தேர்வாகாத நிலையில் தற்போது 3-வது முறையாக பங்கேற்று உடற்தகுதி தேர்வுக்கு சென்ற ேபாது, இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.. மாரிமுத்துவின் திடீர் சாவு அவரது கிராமத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story