மாவட்ட செய்திகள்

2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி சாவு + "||" + Child

2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி சாவு

2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி  சாவு
க.பரமத்தி அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2½ வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.
க.பரமத்தி
2½ வயது குழந்தை 
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி அஞ்சலி. இவர்களுக்கு பிரணவ் என்கிற கார்த்தி (வயது 2½) என்ற மகன் இருந்தான். 
இந்தநிலையில் அஞ்சலிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே குப்பம்- சாலிபாளையத்தில் உள்ள தனது அண்ணன் மணிகண்டன் வீட்டில் தனது மகன் பிரணவ்வை விட்டு சென்றுள்ளார். 
போலீசார் வழக்கு
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பிரணவ்வை காணவில்லை. இதனையடுத்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லையாம்.     இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையை தேடி வந்தனர்.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி சாவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டனின் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்தது. இதையறிந்த பிரணவ் உறவினர்கள் பதறி அடித்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக மிதந்தது காணாமல் போன குழந்தை பிரணவ் என்பதும், அவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்்ததும் தெரியவந்தது. குழந்தையின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
சோகம்
இதுகுறித்து க.பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தை பிரணவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 3 வயது ஆண் குழந்தை கடத்தல் புகார் அளித்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்ட போலீசார்
சென்னை அம்பத்தூரில் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இதுபற்றி புகார் அளித்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் குழந்தையை போலீசார் மீட்டனர்.
2. கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி.
3. குழந்தைகளுக்கு 2-வது கட்ட கோவோவேக்ஸ் சோதனைக்கு அனுமதி; அரசு நிபுணர் குழு பரிந்துரை
2 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசி 2-வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துறைசார் நிபுணர் குழு நேற்று பரிந்துரையை அளித்தது.
4. குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்
குழந்தை பருவத்திற்கும், டீன் ஏஜ் பருவத்திற்கும் இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கும்.
5. தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: பிறந்த மறுநாளே பச்சிளங்குழந்தை கடத்தல்
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த மறுநாளே பச்சிளங்குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.