கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது


கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 27 July 2021 12:39 AM IST (Updated: 27 July 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

கீரை வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

தோகைமலை
தோகைமலை அருகே உள்ள தெற்குபள்ளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 35). கீரை வியாபாரி. அதே பகுதியை சேர்ந்த வடிவேல் மகன்கள் சக்திவேல் (21) சந்தோஷ் (19). இவர்களுக்கு இடையே பணம், ெகாடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த கருப்பையாவை சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து கருப்பையாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த கருப்பையா தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேல், சந்தோஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story