6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 42). இவரை அங்குள்ள குளத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த மாதம் சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜவல்லிபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பட்டன் மகன் கந்தன் (19) மற்றும் 18 வயதான 4 வாலிபர்களை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை போலீசார் சிறையில் வழங்கினர்.
இதேபோன்று பத்தமடை மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த பிச்சையா என்ற உள்ளி பிச்சையா (31) மீது திருட்டு, வழிப்பறி, கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவரையும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story