மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது + "||" + 3 arrested for stealing two-wheelers

இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:

இருசக்கர வாகனங்கள் திருட்டு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றன. இதுவரை 5 இருசக்கர வாகனங்கள் திருட்டு போயுள்ளன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமானூர் போலீசார், இருசக்கர வாகனங்களை திருடிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் வாகன திருட்டில் 3 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சந்தானத்தின் மகன் ரஞ்சித்குமார்(வயது 33), ரவியின் மகன் ரமேஷ்(22), சேகரின் மகன் செந்தில்குமார் (25) ஆகியோரை திருமானூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில், கடையில் திருடிய 3 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே கோவில், வீடு, கடைகளில் தொடர் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஈரோட்டில் சேவல் வைத்து சூதாட்டம்; சிறுவன் உள்பட 8 பேர் கைது
சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சேவல்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டன.
3. குற்ற வழக்குகளில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
குற்ற வழக்குகளில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது
சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பாட்டில்களின் மூடியை திறந்து மதுவை திருடி விற்பனை செய்த 4 பேர் கைது
குடோனில் இருந்து சப்ளைக்கு கொண்டு செல்லும்போது, மதுபாட்டில்களின் மூடியை திறந்து மதுவை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.