கர்நாடகத்தில் 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 27 July 2021 2:15 AM IST (Updated: 27 July 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

மேலும் 31 பேர் சாவு

  கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்து 96 ஆயிரத்து 163 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 31 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 405 ஆக அதிகரித்து உள்ளது.

  நேற்று 1,937 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 28 லட்சத்து 36 ஆயிரத்து 678 பேர் குணம் அடைந்து உள்ளனர். 23 ஆயிரத்து 57 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்கள்.

5 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை

  பெங்களூருவில் 467 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். தட்சிண கன்னடாவில் 357 பேர், மைசூருவில் 162 பேர் பாதிக்கப்பட்டனர். 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகி இருந்தது. 5 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

  தட்சிண கன்னடாவில் 4 பேர், பெங்களூரு நகர், ஹாவேரி, மைசூரு, உத்தர கன்னடாவில் தலா 3 பேர், பெலகாவி, கோலார், மண்டியா, விஜயாப்புராவில் தலா 2 பேர், சிக்கமகளூரு, கதக், கலபுரகி, ராமநகர், சிவமொக்கா, துமகூரு, உடுப்பியில் தலா ஒருவர் இறந்தனர். 14 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story