மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration condemning the federal government

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பொன்மலைப்பட்டி
முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் மற்றும் அகில இந்திய ரயில்வே தொழிற்சங்கமான ஏ.ஐ.ஆர்.எப்.பின் பொதுச் செயலாளர் ஷிவ கோபால் சர்மாவின் உரையாடலை ஒட்டு கேட்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் திருச்சி பொன்மலை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தொழிற்சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர். தொலைபேசி உரையாடல் விவகாரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபடுவது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ் மற்றும் இந்தியில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.தொடர்புடைய செய்திகள்

1. திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்தது
திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.