மாவட்ட செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி + "||" + Teacher killed in accident

விபத்தில் ஆசிரியர் பலி

விபத்தில் ஆசிரியர் பலி
விபத்தில் ஆசிரியர் பலி.
ஊட்டி,

ஊட்டி அருகே லவ்டேலில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் லாரன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இந்தி ஆசிரியராக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது (வயது 33) என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார். 

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் பொருட்களை வாங்கி கொண்டு பள்ளிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஊட்டி-லவ்டேல் சாலை ரீச்சிங் காலனி சந்திப்பு பகுதியில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மொபட் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முகமது ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து லவ்டேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.