மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து கிராமப்புற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து கிராமப்புற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை,
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்குவதையும், கூலி பெறுவதையும் சாதிவாரியாக அணுகும்படி கொண்டு வந்துள்ள மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்பப்பெறக்கோரியும் விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் வீரச்செல்வம் தலைமை தாங்கினார். மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் பொதுச்செயலாளர் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு 250 நாட்கள் வேலையும், ஒரு நாள் கூலி ரூ.500 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story