வைத்தீஸ்வரன்கோவிலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வைத்தீஸ்வரன்கோவிலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 27 July 2021 6:11 PM IST (Updated: 27 July 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

வைத்தீஸ்வரன்கோவிலில் வாலிபரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி,

சீர்காழி அருகே உள்ள மண்ணிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்மொழி (வயது35). இவர் நேற்று இரவு வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு மட விளாகத்தில் சிலருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அருண்மொழியை அரிவாளால் வெட்டி, இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருண்மொழி மீது மணல்மேடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story