மாவட்ட செய்திகள்

தெப்பக்குளம் தூர்வாரும் பணி + "||" + Theppakkulam dredging work

தெப்பக்குளம் தூர்வாரும் பணி

தெப்பக்குளம் தூர்வாரும் பணி
பழனி முருகன் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது.
பழனி:

பழனி மேற்கு கிரிவீதி அருகே சுற்றுலா பஸ்நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ்நிலைய வளாகத்தில், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த தெப்பக்குளம், பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்து வந்தது. 

காலப்போக்கில் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் அங்கு செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து போனது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு பயன்பாடற்று கிடந்தது. இதனால் அந்த தெப்பக்குளத்தை தூர்வார வேண்டும் என்று பக்தர்கள், இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

இதன் எதிரொலியாக, கோவில் இணை ஆணையர் நடராஜன் தெப்பக்குளத்தை தூர்வாரி தூய்மைபடுத்த உத்தரவிட்டார். அதன்படி தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 

முதற்கட்டமாக தெப்பக்குளத்துக்குள் வளர்ந்துள்ள செடி, கொடிகள், குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. விரைவில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.