அரசின் நடவடிக்கைகள் மீன்பிடித்தொழிலை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் - மீனவர்கள் வலியுறுத்தல்
அரசின் நடவடிக்கைகள் மீன்பிடித்தொழிலை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொறையாறு,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தரங்கம்பாடி, கொடியம்பாளையம், தர்காஸ், பழையார், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, சாவடிகுப்பம், நாயக்கர்குப்பம், வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூர், சின்னூர்பேட்டை ஆகிய 19 கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சுருக்குமடி, இரட்டைமடி வலை, அதிவேக குதிரைதிறன் கொண்ட எஞ்ஜினை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. மீன்பிடித்தொழிலை முறைப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சிறு மீன்பிடித்தொழில் நடத்துவோரை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
கடற்பகுதி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள சுருக்கு வலைகளை பயன்படுத்த அனுமதி கோருவோருக்கு கண்டனம் தெரிவிப்பது. சிறு மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டால் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story