மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு


மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு
x
தினத்தந்தி 27 July 2021 7:16 PM IST (Updated: 27 July 2021 7:16 PM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு. கலெக்டர் அலுவலகத்தில் புகார்

திருவண்ணாமலை

கலசபாக்கம் ஒன்றியம் கெங்கவரம் ஊராட்சி நவாப்பளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு துறை சார்ந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு வருடத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. பணித்தள பொறுப்பாளர்கள் பல வருடங்களாக பணிபுாியும் காரணத்தினால் பொதுமக்களின் வேலை அட்டை எண் தெரிந்து பணி செய்வதாக குறித்து கொண்டு அதற்கு உண்டான கூலியை பொதுமக்களிடம் சிறிய தொகையை அளித்து விட்டு முழுதொகையை பெற்று கொள்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக இருக்கிறது. சாலை வசதி, மின் விளக்கு, கைபம்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story