மாவட்ட செய்திகள்

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி கல்லூரி மாணவியின் ஓவியம் + "||" + A painting by a Palani college student in the Asian Record Book

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி கல்லூரி மாணவியின் ஓவியம்

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி கல்லூரி மாணவியின் ஓவியம்
ஆசிய சாதனை புத்தகத்தில் பழனி கல்லூரி மாணவியின் ஓவியம் இடம் பிடித்துள்ளது.
பழனி:

பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் விலங்கியல் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சோபியா. இவர், கடந்த கொரோனா ஊரடங்கின்போது "எனது பூமி" என்ற தலைப்பில் 148 அடி நீளத்திலான தாளில் 540 ஒவியங்களை வரைந்து சாதனை படைத்தார். 

இந்த ஓவியத்தில் உலக நாடுகளின் தேசியக்கொடிகள், தலைவர்களின் படங்கள், இயற்கை காட்சிகள், விவசாயம், தமிழர் பண்பாடு தொடர்பான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை பழனி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தார். 

மேலும் ஓவியத்தை உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியிலும் மாணவி ஈடுபட்டார்.
இந்தநிலையில் மாணவி சோபியாவின் ஓவியத்தை ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பு அங்கீகாரம் செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியது. 

இதற்கான விழா நேற்று பழனி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதற்கு அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-சின் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மாணவி சோபியாவுக்கு வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மாணவியை பாராட்டினர்.