மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சினையில் விஷம் தின்று வாலிபர் தற்கொலை + "||" + Adolescent commits suicide by consuming poison in family trouble

குடும்ப பிரச்சினையில் விஷம் தின்று வாலிபர் தற்கொலை

குடும்ப பிரச்சினையில் விஷம் தின்று வாலிபர் தற்கொலை
நீடாமங்கலத்தில் குடும்ப பிரச்சினையில் வாலிபர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் பாம்பலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் பிரபாகரன்(வயது31). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) தின்றார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரபாகரன் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பிரபாகரன் தாய் மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.