திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் திரும்பி சென்றனர்


திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் திரும்பி சென்றனர்
x
தினத்தந்தி 27 July 2021 2:17 PM GMT (Updated: 27 July 2021 2:17 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் திரும்பி சென்றனர். 120 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி, 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மக்களுக்கு தடு்ப்பூசி போடப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி நாகை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என நகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்ெகாள்ள திரண்டனர். இதில் 120 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. ஏராளமானோர் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு அதிகமான தடுப்பூசிகளை வழங்கி அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய ேவண்டும் என மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கவுரி, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் செங்குட்டுவன் ஆகியோரிடம் கேட்ட போது, போதிய அளவு தடுப்பூசி கிடைத்த உடன் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அவர்கள் கூறினர்.

Next Story