அரசு கலைக்கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம்
அரசு கலைக்கல்லூரியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம்
கோவை
பிளஸ் -2 மாணவ -மாணவிகளுக்கான மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதையடுத்து என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து அனைத்து அரசு கலைக்கல்லூரியிலும், மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வசதியதாக உதவி மையங்கள் பேராசிரியர்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை அரசு கலைக்கல்லூரி மற்றும் புலியகுளம் பெண்கள் கல்லூரி, தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் இந்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பாதுகாப்பு, அரசியல், பி.எஸ்.சி. கணிதம், விலங்கியல், வேதியியல் உள்பட 23 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன.
இதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கியது. இதற்காக கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் முதல் மாணவ -மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய குவிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிறுத்தப்பட்டு, பின்னர் பதிவு செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story