ஆற்காடு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆற்காடு
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே புதுபாடியில் இருந்து மாங்காடு செல்லும் சாலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது.
இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் லாடபுரம் பகுதியில் நரிக்குறவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. அதனையும் கலெக்டர் பார்வையிட்டார்.
ேமலும் ஆற்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதனை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் புனிதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story