சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி. போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி. போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 July 2021 9:38 PM IST (Updated: 27 July 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி

வேலூர்

வேலூர், சைதாப்பேட்டை பி.டி.சி ரோடு, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் காலித் அகமத் என்ற பாபுல் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஒரு வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

அந்த சிறுமி தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது சிறுமியை பின்தொடர்ந்து சென்ற பாபுல் திடீரென சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வேறு யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் அந்த சிறுமி சத்தம் போடவே அங்கிருந்து பாபுல் தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து சிறுமி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுலை கைது செய்தனர்.


Next Story