மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் குடியிருப்புகளில் உருவாக்கப்பட்ட மாடி தோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார் + "||" + Floor garden created in apartments Collector Sridhar visited in person

கள்ளக்குறிச்சியில் குடியிருப்புகளில் உருவாக்கப்பட்ட மாடி தோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார்

கள்ளக்குறிச்சியில் குடியிருப்புகளில் உருவாக்கப்பட்ட மாடி தோட்டத்தை  மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார்
கள்ளக்குறிச்சியில் குடியிருப்புகளில் உருவாக்கப்பட்ட மாடி தோட்டத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார்
கள்ளக்குறிச்சி

சாலைப்பணி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் மற்றும் விளாந்தாங்கல் பகுதிகளில் 14-வது நிதிக்குழு மானியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலையின் இருபுறமும் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி மற்றும் அப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் செல்லும் நீர்ப் பாசன வாய்க்காலை ஆய்வு செய்தார்.
அப்போது போது பாசன வாய்க்கால்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்காமல் தூய்மையாக பராமரித்திட பொதுமக்களை அறிவுறுத்தினார்.
 
மாடி தோட்டம்

இதைத் தொடர்ந்து விளாந்தாங்கல் குடியிருப்புகளில் நகராட்சி மூலம் தயாரிக்கப்பட்ட இயற்கை நுண் உரத்தை பயன்படுத்தி காய்கறி செடிகள், பழமரங்கள் மற்றும் மூலிகை செடிகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாடித்தோட்டத்தை பார்வையிட்ட கலெக்டர் ஸ்ரீதர் வீட்டு உரிமையாளரை பாராட்டினார். மேலும் இதுபோன்று நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் உருவாக்கி இயற்கை முறையில் காய்கறிகள், கீரை வகைள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து இயற்கை உணவினை பயன்படுத்தி பயனடையுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பின்னர் ராஜா நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள், யோகா மையம் மற்றும் நடைபாதை ஆகியவை அமைக்கும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.