பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது


பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 27 July 2021 10:09 PM IST (Updated: 27 July 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் பஸ் நிறுத்தம் அருகில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பிடாகம்நத்தமேட்டை சேர்ந்த லட்சுமணன் (வயது 38) என்ற ரவுடி உருட்டுக்கட்டையை வைத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தார்.

 உடனே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் ஆரோவில் கலைவாணர் நகர் சந்திப்பு அருகில் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்த ரவுடியான விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்த யுவராஜ் (22) என்பவரை ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.

Next Story