மாவட்ட செய்திகள்

மக்கள் குறைகேட்பு முகாம்; அமைச்சர் கீதாஜீவன் மனுக்கள் வாங்கினார் + "||" + People grievance camp; Minister Geeta Jeevan bought the petitions

மக்கள் குறைகேட்பு முகாம்; அமைச்சர் கீதாஜீவன் மனுக்கள் வாங்கினார்

மக்கள் குறைகேட்பு முகாம்; அமைச்சர் கீதாஜீவன் மனுக்கள் வாங்கினார்
தூத்துக்குடி அருகே மக்கள் குறை கேட்பு முகாம் நடந்தது.இதில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகேயுள்ள வீரநாயக்கன் தட்டு, முடுக்குகாடு, ஊரணி ஒத்தவீடு, காதர் மீரான் நகர், கோயில்பிள்ளை நகர், தெர்மல்நகர் கேம்ப்-1, கேம்ப்-2, முத்துநகர், மீனவர் காலனி, லேபர் காலனி ஆகிய இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.