மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் + "||" + Awareness march on motorcycle urging to wear helmet

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்
ஹெல்மெட் அணிய வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கூடலூர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி கூடலூரில் அனைவரும் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கியது. 

ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து ஊர்வலம் புறப்பட்டு மெயின் ரோடு வழியாக பழைய பஸ் நிலையம், ராஜகோபாலபுரம், கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு சென்றடைந்தது. 

இதில் போலீசார், தன்னார்வ அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு திரளாக சென்றனர்.