நேதாஜி விளையாட்டு மைதானம் மூடல்


நேதாஜி விளையாட்டு மைதானம் மூடல்
x
தினத்தந்தி 27 July 2021 10:45 PM IST (Updated: 27 July 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானம் திடீரென்று பூட்டப்பட்டிருந்ததால், விளையாடுவதற்கு வந்த விளையாட்டு வீரர்கள்மற்றும் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உடுமல
உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானம் திடீரென்று பூட்டப்பட்டிருந்ததால், விளையாடுவதற்கு வந்த விளையாட்டு வீரர்கள்மற்றும் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நேதாஜி விளையாட்டு மைதானம்
உடுமலை கல்பனா சாலையில் சுமார் 7ஏக்கர் பரப்பளவு கொண்ட நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள்.
அத்துடன் விளையாட்டு வீரர்கள் ஆக்கி, கூடைப்பந்து, இறகுபந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைவிளையாடி வருகின்றனர். அதற்கான வசதிகள் இந்த மைதானத்தில் உள்ளன. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் விளையாடுவதற்கு அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் வருவார்கள். அத்துடன் விளையாட்டு போட்டிகளும் நடப்பதுண்டு.
விளையாட்டு வீரர்கள்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி இந்த நேதாஜி விளையாட்டு மைதானம் கடந்த ஏப்ரல் மாதம்26-ம்தேதி மாலை முதல் அடைக்கப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து ஊரடங்கில் அரசு அளித்துள்ள கூடுதல் தளர்வுகளின்படி உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானம் கடந்த மாதம் (ஜூன்) 28-ம்தேதி திறக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து இந்த மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.அப்போது நடைபயிற்சி மட்டும் நடைபெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 5-ம்தேதி முதல் விளையாட்டு வீரர்களும் வந்து விளையாடத்தொடங்கினர்.பல்வேறு விளையாட்டுகள் நடந்துவந்தன. விளையாட்டு வீரர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாடி வந்தனர்.அத்துடன் இளைஞர்கள் உடற்பயிற்சியும் செய்து வந்தனர்.
 அடைப்பு
இந்த மைதானம் நேற்று  காலை வழக்கம் போல் திறக்கப்பட்டிருந்தது.காலையில் பலர் நடைபயிற்சிக்கும் வந்துசென்றனர். இளைஞர்கள் விளையாடிவிட்டு சென்றனர். இந்த நிலையில் மாலை நேரத்தில்நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்களும், விளையாடுவதற்கு வரும் விளையாட்டு வீரர்களும் நேற்றுமாலை வழக்கம் போல் இந்த விளையாட்டு மைதானத்திற்கு வந்தனர்.ஆனால் விளையாட்டு மைதானம் பூட்டப்பட்டிருந்தது.அதனால் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்களும், விளையாடுவதற்கு வந்த விளையாட்டு வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அத்துடன் இந்த மைதானத்தை திறந்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த ஆவணசெய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story