மாவட்ட செய்திகள்

கஞ்சாவுடன் வாலிபர் கைது + "||" + arrest

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது
கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தான் வைத்திருந்த பையை கீழேபோட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கீழச்செல்வனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பசாமி (வயது20) என்பவரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த மண்டைஅருண் என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சாவுடன் வாலிபர் கைது
கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.