பெண்ணிடம் 8 பவுன் நகை வழிப்பறி
பெண்ணிடம் 8 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மனைவி அங்கம்மாள் (வயது63) காய்கறி வாங்குவதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க கூடியிருந்தனர். போலீசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த மர்ம நபர்கள் 2 பேர் அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த அங்கம் மாளை கண்டிப்புடன் அழைத்துள்ளனர். பின்னர் அவருக்கு உதவுவது போல் நடித்து 5 பவுன் தங்க சங்கிலி, 3 பவுன் வளையல் என மொத்தம் 8 பவுன் நகைகளை ஏமாற்றி வழிப்பறி செய்து தப்பிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story