வால்பாறையில் 1080 பேருக்கு கொரோனா தடுப்பூசி


வால்பாறையில் 1080 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 27 July 2021 11:02 PM IST (Updated: 27 July 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 1,080 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

வால்பாறை

வால்பாறையில் 1,080 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

கொரோனா தடுப்பூசி 

வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதியில் கொரோனா  தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டுக்கொண்டனர். 

இதில் மொத்தம் 1,080 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 977 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

அனைவருக்கும் போட ஏற்பாடு 

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சுற்றுலா மையமான வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் இங்கு எளிதில் கொரோனா பரவும் நிலை உள்ளது. 

எனவே அதை தடுக்கும் வகையில், இங்குள்ள அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது தவணையாக தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Next Story