மாவட்ட செய்திகள்

கட்டிட மேஸ்திரி பலி + "||" + accident one person death

கட்டிட மேஸ்திரி பலி

கட்டிட மேஸ்திரி பலி
ல்லடம் அருகே சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி யானார்.
பல்லடம்,
ல்லடம் அருகே சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி யானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கட்டிட மேஸ்திரி
 பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சரவணன் வயது 33.  இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி  கவுரி 27. இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். 
இந்த நிலையில் சரவணன் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள கள்ளகினர் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு  மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து  மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். பல்லடம் -தாராபுரம் சாலையில் ஆலூத்துப் பாளையம் பிரிவு அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.  

பலி
இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து மயங்கினார். உடனே  அந்த வழியே சென்றவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

----
Reporter : P. Arjunan  Location : Tirupur - Palladam

தொடர்புடைய செய்திகள்

1. வீடு கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலி
எருமப்பட்டி அருகே வீடு கட்டுமான பணியின் போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலியானார்.