கேரளாவுக்கு கடத்த முயன்ற 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 27 July 2021 11:06 PM IST (Updated: 27 July 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் சோதனை 

பொள்ளாச்சி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமலைசாமி, ஜெப்லா மற்றும் போலீசார் சூளேஸ்வரன்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் இருந்த 2 பேரிடம் போலீசாா் விசாரணை நடத்தினார்கள். 

ரேஷன் அரிசி கடத்தல் 

அதில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்த சரவணக்குமார் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் (25) என்பதும், பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரியவந்தது. 

இதையடுத்து காருடன் 1100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் பிடிப்பட்ட 2 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

ஆனைமலை

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆனைமலை அருகே ஆலாங்கடவு பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காரில் ரேஷன் அரிசியைகடத்திய பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையை சேர்ந்த பாலாஜி (31), ஆரிப் (27) 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், காரு டன் 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் ரேஷன் அரிசி கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 டன் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story