வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
x
தினத்தந்தி 27 July 2021 11:07 PM IST (Updated: 27 July 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சாயல்குடி, 
கடலாடி அருகே பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது30). இவர் ஒரு பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். இந்தநிலையில் கணேசமூர்த்தி யை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் கார்த்திகேய சேதுபதி (32), மகேஷ் குமார் (22), சோனைஎன்ற பழனிநாதன், மகேஷ், ஜெகநாதன் ஆகியோர் தாக்கி உள்ளனர். கணேசமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கடலாடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேய சேதுபதி, மகேஷ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 பேரை கடலாடி போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story