மதுவிற்பனை செய்த 11 பேர் கைது
மதுவிற்பனை செய்த 11 பேர் கைது
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் பெட்டிக்கடைக்காரர்கள், மளிகை கடைக்காரர்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் சட்டப்படி குற்றமாகும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள், போலீசார் கடைக்காரர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரித்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் மது விற்பனை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 56 மதுபாட்டில்கள், ரூ.1,400 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story