தாவரவியல் பூங்கா திறப்பு விழா
தாவரவியல் பூங்கா திறப்பு விழா
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள கோடாங்கி பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகம், இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சங்கோதிபாளையத்தில் மகிழ்வனம் என்ற பெயரில் பூங்கா அமைத்து பராமரித்து வருகின்றனர் இந்த பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், 200க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த நிலையில் மகிழ்வனம் பூங்காவை பொதுமக்கள் பார்வைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி தளத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். அபூர்வ வகை மரக்கன்றுகளை நட்டு வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது
சுற்றுச்சூழல் மாசுபடுவதினால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை பாதிக்கிறது. இயற்கை மாசுபடுவதிலிருந்து பாதுகாக்க நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. இயற்கையை பாதுகாக்க மனிதர்களாகிய நாமும் நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு மரங்கள் வளர்க்க வேண்டும். இயற்கை வல்லுநர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் புவி வெப்பமாவதை தடுப்பதற்காக அதிகளவில், அதாவது பூமியின் நிலப்பரப்பில் 33 சதவீதம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story