ரயில்வே ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

கீரனூர்,ஜூலை.28-
கீரனூர் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 41). இவர் கீரனூர் ெரயில்நிலையத்தில் கேட்கீப்பராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் எதினிப்பட்டியில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் தங்க வளையல், 7 பவுன் கொண்ட 2 சங்கிலிகள், வெள்ளி கொலுசுகள், ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பாலசுப்ரமணியன் கீரனூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story