புகையிலை பொருட்கள் விற்றால் கடை உரிமம் ரத்து


புகையிலை பொருட்கள் விற்றால் கடை உரிமம் ரத்து
x
தினத்தந்தி 27 July 2021 11:48 PM IST (Updated: 27 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை
புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று  கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உறுதி மொழி
புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி நிகழ்ச்சி  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் பிரபாவதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்வதற்கும், அதேபோல் அதை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீங்குகள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களை தவறான பாதையிலிருந்து மீட்க புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்வது கண்டறிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றார்.
முன்னதாக புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணக்குமார், ராஜேஸ், செந்தில் முத்துக்குமார் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, வணிகர் நல சங்க தலைவர் வாசு, துணை தலைவர் சரவணன், பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வீரபாண்டி, துணைச் செயலாளர் திருமாறன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வணிகர்கள் உறுதிமொழி எடுத்தனர். 
இதில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது. அதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story