திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை


திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை
x

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
பரவலாக மழை
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.  இந்நிலையில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதை தொடர்ந்து வானில் கருமேக கூட்டம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் தூறலாக தொடங்கிய மழை நேரம் செல்ல ெசல்ல பலத்த மழையாக பெய்தது.  இதனால் திருவாரூர் பகுதியில் நேற்று மாலை குளிர்ச்சியான காலநிலை நிலவியது. அப்போது வானில் வானவில் தோன்றி நீண்ட நேரம் மக்களின் கண்களுக்கு விருந்தளித்தது. இதைப்போல மன்னார்குடியிலும் வானவில்  தோன்றியது.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று காலையும் வெயில் தாக்கம் அதிகமாக  இருந்தது. வெயில் சுட்டெரித்து வந்தாலும், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் மாலை திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி, பழையனூர், சித்தனங்குடி, திருராமேஸ்வரம், கோரையாறு, ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 30 நிமிடம் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீர் தேங்கியது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story