கொய்யா விளைச்சல் அமோகம்


கொய்யா விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 28 July 2021 12:29 AM IST (Updated: 28 July 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் கொய்யா விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் பகுதியில் கொய்யா விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. 
ஏழைகளின் ஆப்பிள் 
ஆலங்குளம் பகுதியில் மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர் பட்டி, தென்கரை, அக்கரைபட்டி, கொங்கன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 60 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் கொய்யாவை சாகுபடி செய்துள்ளனர். இங்கு  நாட்டு கொய்யா, சீனி கொய்யா, தைவான் கொய்யா, லக்னோ-48 ஆகிய வகைகளை சேர்ந்த கொய்யா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 
கிணற்று பாசனம் 
இதுகுறித்து விவசாயி முருகன் கூறியதாவது:-  ஆலங்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் 60 ஏக்கர் பரப்பில் கொய்யாவை சாகுபடி செய்துள்ளனர். கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்து வருகிறோம். 
இங்கு விளையும் ெகாய்யா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.  தைவான் கொய்யா மட்டும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. 
நல்ல மகசூல் 
கடந்த காலங்களில் கொய்யா பழத்திற்கு நல்ல விலை  இருந்தது. அதாவது ஒரு கிலோ சீனி மற்றும் நாட்டு கொய்யா ரூ.25-க்கு விலை போனது.  ஆனால் தற்போது ரூ.12-க்கு தான் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். அதேபோல தைவான் ஒரு கிலோ ரூ.50-க்கு விலை போனது. தற்போது ரூ.25-க்கு தான் வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மகசூல் நன்றாக இருந்தும் எதிர்பார்த்த விலை கிைடக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குறைவான விலைக்கு விற்றாலும் பரவாயில்லை என நினைத்தாலும் அந்த விலைக்கு கொய்யாவை வாங்க வியாபாரிகள் சரியாக வருவதில்லை.  
வாழ்வாதாரம் பாதிப்பு 
இதே நிலை நீடித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடினப்பட்டு உழைத்தும் எதிர்பார்த்த மகசூல் கிடைத்தும், நல்ல விலைக்கு விற்க முடியாத நிலையில் உள்ளோம். 
எங்களின் சூழ்நிலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏதாவது ஒருவகையில் எங்களுக்கு உதவிசெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story