சிறுமியை பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளருக்கு 20 ஆண்டு சிறை திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
திருச்சியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதத்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருச்சி
திருச்சியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதத்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமி பலாத்காரம்
திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 20). இவர் நடன பயிற்சி அகாடமியில் பணியாற்றி வந்தார். இவரிடம், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 6 வயது சிறுமி நடன பயிற்சி கற்க வந்தார்.
பயிற்சி வகுப்பு முடிந்ததும், சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர் வந்தனர். அப்போது அந்த சிறுமி, நடன பயிற்சியாளர் சரவணகுமார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் தனக்கு உடல் வலிப்பதாக கூறி உள்ளார்.
கைது
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரவணகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
20 ஆண்டு சிறை தண்டனை
சரவணகுமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில், சரவணகுமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அதை. கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து இருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்.
Related Tags :
Next Story