கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 4 பேர் கைது
வாடிப்பட்டி அருகே பயிர்க்கடன் வழங்கியதாக ரூ.1 கோடி மோசடி செய்த கூட்டுறவு சங்க செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,ஜூலை.
வாடிப்பட்டி அருகே பயிர்க்கடன் வழங்கியதாக ரூ.1 கோடி மோசடி செய்த கூட்டுறவு சங்க செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூட்டுறவு கடன் சங்கம்
வாடிப்பட்டி அருகே பள்ளப்பட்டி விவசாய கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியன் (வயது 56), முன்னாள் தலைவர் ராமசாமி (56), கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் (48), பாலாஜி (51) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடியே 71 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.
கைது
இது குறித்து சதீஸ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன் முடிவில் 4 பேரும் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் சங்க செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர் ராமசாமி மற்றும் பரமேஸ்வரன், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story