மாவட்ட செய்திகள்

பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

பகுஜன் சமாஜ் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநிலச் செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் சிவராஜ், பாளையங்கோட்டை தொகுதி தலைவர் சிவந்தி சுரேஷ், செயலாளர் லாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பொதுக்கூட்டத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்து பேசியதற்கு தமிழக அரசு அவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.