ஆடிப்பட்ட காய்கறி விதைகள் வினியோகம்
தோட்டக்கலை துறை மூலம் ஆடிப்பட்ட விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது என அதிகாரிகள் கூறினர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை வட்டார வள மையத்தில் இருந்து 2021- 2022-ம் ஆண்டுக்கு 2,287 ஹெக்டேர் இலக்கு பாசனப் பரப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது தக்காளி, பீர்க்கங்காய், புடலங்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட ஆடிப்பட்ட காய்கறி விதைகளை தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை தோட்டக்கலை உதவி இயக்குனர் மாரீஸ்வரி, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் விஜயகுமார் ஆகியோர் கூறினர்.
Related Tags :
Next Story