மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் தண்ணீர் தொட்டியில் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை + "||" + police investigation

தஞ்சை அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் தண்ணீர் தொட்டியில் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை

தஞ்சை அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் தண்ணீர் தொட்டியில் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை
தஞ்சை அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வல்லம்:-

தஞ்சை அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்ணீர் தொட்டியில் தொழிலாளி பிணம்

தஞ்சை அருகே உள்ள மருங்குளத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த தோழப்பன்(வயது 55) என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தோட்டக்கலை பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன் தினம் இரவு தோழப்பன் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தோட்டக்கலை பண்ணைக்கு வேலைக்கு வந்தவர்கள் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தோழப்பன் பிணமாக கிடந்ததை பார்த்துள்ளனர். 

கொலையா? போலீசார் விசாரணை

இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் போலீசார் தண்ணீர் தொட்டியில் மிதந்த தோழப்பனின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து தோழப்பனின் மகன் வினோத் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தோழப்பனை யாரேனும் கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.