அதிகாரிகள் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் மற்றும் கலப்பட டீத்தூள் பறிமுதல்


அதிகாரிகள் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் மற்றும் கலப்பட டீத்தூள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 July 2021 1:39 AM IST (Updated: 28 July 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் மற்றும் கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டன

கரூர்
கரூர் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோடின் கலந்த பான் மசாலா குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது சின்னாண்டான்கோவில் பகுதியில் 3 கடைகளில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 5.150 கிலோ எடையிலான புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 6 டீக் கடைகளில் சாயமேற்றப்பட்ட கலப்பட டீத்தூள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு சுமார் 6 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதேபோல நேற்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் கரூர் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள டீக்கடை, மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது ஒரு டீக்கடையில் சுமார் 5 கிலோ எடையிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


Next Story