மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி + "||" + Elderly man killed in vehicle collision

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி
வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்:
அரியலூர் புறவழிச்சாலையில் பழைய இரும்புக்கடை வைத்திருப்பவர் நடராஜன்(வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் இருந்து சைக்கிளில் தவுத்தாய்குளம் நோக்கி சென்றார். அப்போது அவர் மீது, அந்த வழியாக சென்ற வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நடராஜன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடராஜனின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
பால் லாரி- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் வாலிபர் இறந்தார்.
2. பஸ் மோதி இளம்பெண் சாவு
பஸ் மோதி இளம்பெண் சாவு
3. விபத்தில் ஒருவர் பலி
விபத்தில் ஒருவர் பலி
4. வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
5. கார் மோதி வாலிபர் சாவு
கார் மோதி வாலிபர் சாவு