தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்கு


தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 July 2021 1:58 AM IST (Updated: 28 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்:
அரியலூரில் செந்துறை சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள தனியார் விடுதியில் அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று அதிகாலை சோதனை செய்தார். அப்ேபாது ஒரு அறையில் 6 பேர் சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் இருந்து 24 ஆயிரத்து 100 ரூபாயை கைப்பற்றினார். இதேபோல் மற்றொரு அறையில் சூதாடிக் கொண்டிருந்த 8 பேரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 80-ஐ கைப்பற்றினார். மேலும் அந்த 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story