மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் 1,501 பேருக்கு கொேரானா பாதிப்பு + "||" + Corona affects 1501 people in Karnataka

கர்நாடகத்தில் 1,501 பேருக்கு கொேரானா பாதிப்பு

கர்நாடகத்தில் 1,501 பேருக்கு கொேரானா பாதிப்பு
கர்நாடகத்தில் 1,501 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பெங்களூரு:

1,501 பேருக்கு பாதிப்பு

  கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 28 லட்சத்து 97 ஆயிரத்து 664 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 32 பேர் இறந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 437 ஆக உள்ளது.

  நேற்று 2 ஆயிரத்து 39 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 38 ஆயிரத்து 717 ஆக உயர்ந்து உள்ளது. 22 ஆயிரத்து 487 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

13 மாவட்டங்களில்....

  புதிதாக பெங்களூருவில் 354 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். தட்சிண கன்னடாவில் 247 பேர், மைசூருவில் 108 பேர், உடுப்பி, ஹாசனில் தலா 98 பேர் உள்பட 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. பீதரில் மட்டும் புதிதாக யாரும் கொரோனாவுக்கு பாதிக்கப்படவில்லை.

  பெங்களூரு நகரில் 5 பேர், ஹாசனில் 4 பேர், பெலகாவி, கோலாரில் தலா 3 பேர், பெங்களூரு புறநகர், மைசூரு, துமகூரு, உத்தர கன்னடாவில் தலா 2 பேர், பல்லாரி, சிக்கமகளூரு, குடகு, கொப்பல், மண்டியா, ராய்ச்சூர், ராமநகர், சிவமொக்கா, உடுப்பியில் தலா ஒருவர் இறந்தனர். 13 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.