உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்
x
தினத்தந்தி 27 July 2021 8:32 PM GMT (Updated: 27 July 2021 8:32 PM GMT)

பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 2 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

பழனி: 


காணிக்கை எண்ணும் பணி
தமிழகத்தில் உள்ள ஆன்மிக தலங்களில் முக்கியமானதாகவும், முருகப்பெருமானின் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு திருவிழா காலத்தில் மட்டுமின்றி, தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். 

நேற்று பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல உதவி ஆணையர் விஜயன் மற்றும் பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.1 கோடி 
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 31 ஆயிரத்து 250-ம், தங்கம் 112 கிராம், வெள்ளி 1 கிலோ, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு 15 கரன்சி நோட்டுகள் வருவாயாக கிடைத்துள்ளது. 

மேலும் தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும்  பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், ெகடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

 உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என 100-க் கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

Next Story