மாவட்ட செய்திகள்

சேலத்தில்புகையிலை பொருட்களுக்கு எதிராக வணிகர்கள் உறுதிமொழி + "||" + Pledge of Merchants

சேலத்தில்புகையிலை பொருட்களுக்கு எதிராக வணிகர்கள் உறுதிமொழி

சேலத்தில்புகையிலை பொருட்களுக்கு எதிராக வணிகர்கள் உறுதிமொழி
புகையிலை பொருட்களுக்கு எதிராக வணிகர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சேலம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, உணவு பாதுகாப்பு துறை ஆகியவை சார்பில் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் ஆ லோசனை கூட்டம் நடந்தது. பேரமைப்பு தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் இளையபெருமாள், வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கதிரவன் கலந்து கொண்டு புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என வியாபாரிகள் உறுதி மொழி எடுத்தனர். இதில் பேரமைப்பின் பொருளாளர்கள் சந்திரதாசன், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.