ஓமலூர் ரெயில்வே மேம்பாலத்தில் லாரிகள் மோதல்
ஓமலூர் ரெயில்வே மேம்பாலத்தில் லாரிகள் மோதிக்கொண்டன
ஓமலூர்
ஓமலூர்- தாரமங்கலம் மேச்சேரி செல்லும் சாலையில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் முத்துநாயக்கன்பட்டியில் இருந்து கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது மேச்சேரியில் இருந்து பழைய பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஓமலூரை நோக்கி சென்றது. மேம்பாலத்தின் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாலத்தின் ஒருபகுதியில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதால் ஒருவழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டன. விபத்துக்குள்ளான லாரிகள் 8 மணி நேரமாக அப்படியே நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story