மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 4 அடி உயர்வு + "||" + mettur dam

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 4 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 4 அடி உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது இதனால் இந்த அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி பிடிக்கும் நிலையில் உள்ளன. எனவே அணைகளின் பாதுகாப்பு கருதி கடந்த 5 நாட்களாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த 24-ந் தேதி இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 25-ந் தேதி காலை அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 665 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் காலை நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரத்து 144 கனஅடியாக அதிகரித்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அணைக்கு நீர்வரத்து 34 ஆயிரத்து 141 கனஅடி தண்ணீர் வந்தது.
நீர்மட்டம் உயர்வு
நேற்று முன்தினம் இரவு முதல் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த 25-ந் தேதி காலை 73.27 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 77.43 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.